இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் கடும் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 336 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 37ஆயிரத்து 755ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 99 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 11 ஆயிரத்து 416 ஆக இருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை பத்தே முக்கால் மணிவாக்கில் 78 காசுகள் வீழ்ச்சியடைந்து 72 ரூபாய் 64 காசுகளாக இருந்தது. சீன இறக்குமதிப் பொருட்களின் மீது வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை அடுத்து டாலரின் மதிப்பு உலக அளவில் உயர்ந்துள்ளது. இதனால்தான் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: