ட்வீட் கார்னர்.... ஸ்மித்துக்கு கால்கட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (29 வயது), தனது நீண்ட நாள் காதலியான டானி வில்லிசை திருமணம் செய்து கொண்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நியூசவுத் வேல்சில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதில் ஆஸி. அணி வீரர்கள் ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹென்ரிக்ஸ் உட்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று புதுமனத் தம்பதியரை வாழ்த்தினர்.

சட்டம் படித்துள்ள டானி வில்லிஸ், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சிட்னி மதுபான விடுதியில் ஸ்மித்தை சந்தித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வரும் நிலையில், ஐசிசி உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: