தொடர்ச்சியாக 4வது வெற்றி பார்சிலோனா அசத்தல்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை போராடி வென்றது. ரியல் சோசிடாட் வீரர் எலுஸ்டான்டோ 12வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடிக்க, 2வது பாதியில் உத்வேகத்துடன் விளையாடிய பார்சிலோனா அணிக்கு 63வது நிமிடத்தில் சுவாரெஸ், 66வது நிமிடத்தில் டெம்பெல் கோல் அடித்து வெற்றிக்கு உதவினர். நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் (10), செல்டா விகோ (7) அடுத்த இடங்களில் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: