எள், நிலக்கடலை பருப்பு வரத்து இல்லாததால் எண்ணெய் விலை கடும் உயர்வு

விருதுநகர்: எள் மற்றும் நிலக்கடலை பருப்பு வரத்து இல்லாததால், விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் டின்னுக்கு ₹250, கடலை எண்ணெய் டின்னுக்கு ₹50 விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹5,300க்கு விற்ற நிலக்கடலை பருப்பு (80 கிலோ) இந்த வாரம் ₹5,600க்கு விற்பனையானது. இதனால் ₹2,050க்கு விற்ற கடலை எண்ணெய் டின் (15 கிலோ) ₹2,100க்கு விற்பனையானது. இதேபோல  ₹3,630க்கு விற்ற நல்லெண்ணெய் டின் இந்த வாரம் ₹3,880க்கும், ₹1,125க்கு விற்ற பாமாயில் டின் ₹1,130க்கும் விற்பனையானது. கடந்த மாதம் ₹3,220க்கு விற்ற நல்லெண்ணெய் டின் (15 கிலோ) டின், இந்த மாதம்  ₹660 உயர்ந்து ₹3,880 ஆக விற்பனையானது.

இதேபோல கடலை எண்ணெய் டின் ₹1,900ல் இருந்து ₹200 விலை உயர்ந்து ₹2,100 ஆக விற்பனையாகிறது. புளி கிலோவிற்கு ₹70 வரை விலை உயர்ந்துள்ளது. புளி புதுவரத்து தை மாதத்திற்கு தொடங்கும் நிலையில், ஏசி குடோன்களில் இருப்பும் குறைவதால் புளி கிலோவிற்கு ₹30 முதல் ₹70 வரை உயர்ந்துள்ளது. சாதாபுளி கிலோவுக்கு ₹80ல் இருந்து 110க்கும், நடுத்தரம் ₹110ல்  இருந்து ₹170 ஆகவும், நயம் புளி ₹130லிருந்து ₹200 ஆகவும் விற்பனையானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: