வெள்ளக்கோவிலில் 20 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு வந்தது

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் 20 டன் முருங்கைகாய் நேற்று விற்பனைக்கு வந்தது. வெள்ளக்கோவிலில் செயல்படும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக்காயை ஞாயிறுதோறும் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அவற்றை வியாபாரிகள் வாங்கி  கோவை மற்றும் சென்னைக்கு மார்க்கெட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் வெளிமாநிலத்துக்கும் அனுப்பப்படுகிறது.

நேற்று 20 டன் முருங்கைகாய் விற்பனைக்கு வந்தது. மரமுருங்கை கிலோ ரூ.8க்கும், செடி முருங்கை கிலோ ரூ.10க்கும் விற்றது. கடந்த வாரம் 25 டன் முருங்கைகாய் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ மரமுருங்கை ரூ.6க்கும்,  செடி முருங்கை கிலோ ரூ.8க்கும் விற்றது.

முருங்கை விவசாயிகள் பயன் அடையும் வகையில் முருங்கைக்கு சீரான விலை கிடைக்க. இப்பகுதியில் முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: