×

காளான் பரோட்டா

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நோய்களை குணப்படுத்துகிறது.

செய்முறை  
கோதுமை, மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையவும். மாவை ஒரு பாத்திரத்தில் மூடி சிறிது நேரம் வைக்கவும். வாணலியில் பல்லாரி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறி, நறுக்கிய காளான் சேர்த்து வேக வைக்கவும். காளான் வெந்ததும் சீரகத்தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும். பின் வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கிளறி ஆற வைக்கவும். பிசைந்த மாவை பரோட்டா போல போடவும். அதன் மீது காளான் மசாலாவை வைக்கவும். இதன்மீது மற்றொரு பரோட்டாவை வைத்து, மசாலா வெளியே வராமல் ஓரங்களை இணைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் பரோட்டாவை வைத்து, எண்ணெயை தூவி இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் பரோட்டா ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mushroom parata
× RELATED மேற்கு வங்கத்தில் சூடுபிடித்தது...