மதுரை வெஜ் பாஸ்தா

பள்ளி குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்ல கட்டாயம் இருக்கிற ஒரு அயிட்டமாக மாறி இருக்கிறது. இதை செஞ்சு பாருங்க.. குழந்தைங்க பிரியமா சாப்பிடுவாங்க.

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரியை சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி பின், நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.தொடர்ந்து வினிகர், சோயா சாஸ் சேர்த்து வதக்கியதும் மக்ரோனியை சேர்த்து ஒரு சேர கிளறவும். இறக்கியதும் தக்காளி சாஸை சேர்த்து கிளறவும்.சுவையான வெஜ் பாஸ்தா ரெடி.

தேவையான பொருட்கள்

மக்ரோனி    ஒரு கப்

தக்காளி    3

பச்சை மிளகாய்    2

கொத்தமல்லி    சிறு கைப்பிடி

சீரகம்    அரை ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது    2 ஸ்பூன்

பல்லாரி    2

பீன்ஸ், பட்டாணி, கேரட்    50 கிராம்

குடைமிளகாய்    1

கோஸ்    50 கிராம்

வெங்காயத்தாள்    50 கிராம்

சோயா சாஸ்    3 ஸ்பூன்

தக்காளி சாஸ்    அரை கப்

வினிகர்    2 ஸ்பூன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: