அத்திக்காய் பொரியல்

கண்களுக்கு குளிர்ச்சியும், மலச்சிக்கலையும் குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்தது அத்திக்காய். அதில் பொரியல் செய்து சாப்பிடலாமா?

செய்முறை

அத்திக்காயை நன்கு கழுவி இரு துண்டுகளாக வெட்டம். பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தை போட்டு தாளித்து, பின் பல்லாரி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, சாம்பார் தூள், மஞ்சள் தூள், அத்திக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடியால் பாத்திரத்தை மூடவும். தண்ணீர் வற்றும் வரை வேகவிட்டு இறக்கி பரிமாறவும்.சுவையான அத்திக்காய் பொரியல் ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: