சிறுமி பலாத்கார விவகாரம்: மகிளா நீதிமன்றத்தில் 17 பேர் மீது 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 14 வயது சிறுமி 7 மாதங்களாக தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அயனாவரத்தை சேர்ந்த செக்யூரிட்டி ரவிகுமார் (56), பெரம்பூர் நீல்ஸ் கார்டன் எரோல் பிராஸ் (58), கதிர்வேடு, பாலாஜி நகர் சுகுமாறன் (60) உள்ளிட்ட 17 பேர் ைகது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 80 பேரிடம் விசாரணைநடத்தப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ேநற்று 17 குற்றவாளிகளுக்கு எதிராக 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: