‘ஏழையிடம் கூட வாழலாம், கோழையிடம் வாழவே முடியாது’வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை: உதவி கமிஷனர், ஆர்டிஓ விசாரணை

சென்னை: சென்னை அருகே குழந்தை இல்லாததால் மாமியார் கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டி வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில்நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் என்ற தேவானந்த் (41).. அம்பத்தூர் தொழிற்பேட்டை தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஆனந்தி என்ற மோகனவள்ளி (39). கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. இவர்களுடன், ஆனந்த் தாய் சிவகாமி (60), தந்தை சம்பந்தம் (70) மற்றும் சகோதரர் சேகர் ஆகிய 3 பேரும் வசித்து வருகின்றனர்.

Advertising
Advertising

நேற்று முன்தினம் ஆனந்த் மற்றும் சம்பந்தம் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்துக்காக வேலூருக்கு சென்றனர்.  நேற்று காலை, ஆனந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, தற்கொலை செய்து கொள்ளும் முன் ஆனந்தி தனது அண்ணன் துரைமுருகன், அக்கா கணவர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு அதிகாலை 2.30 மணிக்கு வீடியோ குரல் பதிவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதில், ஆனந்தி உருக்கத்துடன் கூறியிருப்பதாவது: என்னை வீட்டில் யாரும் மதிப்பது கிடையாது.

இன்னமும் கர்ப்பம் ஆகாததால் மாமியார் என்னை திட்டி வருகின்றார். மாமியார் கொடுமைக்காரி. மாமனார், கணவர் அவருக்கு பயந்து நடக்கின்றனர். எனது கணவர் தாய், தந்தைக்கு பயந்த கோழை. ஏழையிடம் கூட வாழ முடியும். ஆனால் ஒரு கோழையிடம் வாழவே முடியாது. இவர்கள் கொடுமை தாங்காமல் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். இதற்கு காரணம் கணவர் ஆனந்த், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் சம்பந்தம்தான். இவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார். இதை கடிதமாகவும் எழுதி வைத்துள்ளார்.

இதுகுறித்து, திருமுல்லைவாயல்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம்  முடிந்து ஓராண்டே ஆவதால் ஆவடி உதவி கமிஷனர் ஜெயராமன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ  சத்தியா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ காட்சி சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி சிரிப்பு:

வீடியோவில் பேசும் ஆனந்தி, ‘‘எனது கடைசி சிரிப்பை எல்லோரும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு காட்டும் சிரித்த முகத்தின் காட்சி, பார்ப்போர் பலரையும் உலுக்கி எடுக்கும் விதமாகவே உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: