தமிழகம் முழுவதும் 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய டீன்

சென்னை: தமிழகம் முழுவதும் 5 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவு: வேலூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியராக உள்ள திருமால் பாபு, பதவி உயர்வு பெற்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்படுகிறார். இந்தப் பதவியில் இருந்த கனகராஜ் ஓய்வு பெற்றுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மயக்கவியல்துறை பேராசிரியர் குமுதா லிங்கராஜ், பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த டாக்டர் ஜெயக்குமார் ஓய்வு பெற்றுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் ராஜேந்திரன், தேனி மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த திருநாவுக்கரசு ஓய்வு பெற்றுள்ளார். சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியர் வசந்தி, பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த லலிதா ஓய்வு பெற்றுள்ளார்.

கோவை மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த சோமசேகர் ஓய்வு பெற்றுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: