உ.பி. ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் பலி

பிஜ்னோர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோரில் மோகித் பெட்ரோ கெமிக்கல் என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த சில தினங்களாக கொதிகலன் பழுதுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இதை பழுதுபார்க்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்பொழுது, அந்த கொதிகலன், வெடித்ததில், அங்கு பணியில் இருந்த 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து மாயமாகியுள்ள தொழிற்சாலை உரிமையாளரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: