ஐசிசி டெஸ்ட் தரவரிசை முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா: குக் 10வது இடம் பிடித்து ஓய்வு

துபாய்: இங்கிலாந்து அணியுடன் நடந்த தொடரில் தோற்றாலும், டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து தொடர் தொடங்கும் முன்பாக 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த இந்தியா, 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததை அடுத்து 10 தரப்புள்ளிகளை இழக்க நேரிட்டது. எனினும், இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே சமயம் அபாரமாக வென்ற இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது.

Advertising
Advertising

நியூசிலாந்து அணி (102) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா தலா 106 புள்ளிகளுடன் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. ஓவல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டர் குக் (709 புள்ளி) 10வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா (772) 6வது இடத்தில் உள்ளார்.

ஆண்டர்சன் அசத்தல்:

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 4வது இடம் பிடித்திருப்பதுடன், வெற்றிகரமாக விக்கெட் வேட்டை நடத்திய வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் இங்கிலாந்து வேகம் ஆண்டர்சன். இந்திய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 24 விக்கெட் கைப்பற்றிய அவர், இதுவரை 143 டெஸ்ட் போட்டியில் 564 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

மெக்ராத் 563 விக்கெட் வீழ்த்தி படைத்த சாதனையை ஆண்டர்சன் முறியடித்தார். 3வது இடத்தில் உள்ள இந்திய சுழல் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க ஆண்டர்சனுக்கு இன்னும் 56 விக்கெட் தேவை. டெஸ்ட் விக்கெட் வேட்டை டாப் 10ல், இலங்கையின் முத்தையா முரளிதரன் (800) முதலிடம் வகிக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: