அரசின் பொருளாதார கொள்கை முடிவு என்பதால் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விவகாரத்தில் தலையிட முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் அதன் விலையை குறைக்கவும், நிலையான ஒரு விலையை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி டிசைனர் பூஜா மகாஜன் என்பவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “பெட்ரோல், டீசல் விலையை தாங்களே நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்ந்துள்ளதால், நாட்டில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தவறான தகவலை மக்களுக்கு அளித்து வருகிறது.

 
Advertising
Advertising

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், நாட்டில் எரிபொருள் விலை குறைவதில்லை. கடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின்போது தொடர்ந்து 22 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் இருந்தது.” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே.ராவ் அடங்கிய அமர்வு தங்களது உத்தரவில், “தினமும் மாறுதலுக்கு உள்ளாகிவரும் பெட்ரோல், டீசல் விலை என்பது அரசின் பொருளாதார கொள்கை முடிவு. பொருளாதாரத்தில் பல்வேறு பிரச்னைகள் தற்போது உள்ளன. இந்த சமயத்தில், அரசின் கொள்கை முடிவு விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் விரும்பவில்லை. அரசே, இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கலாம். ஆனால், இதுகுறித்து நாங்கள் உத்தரவிட விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: