5 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல்: தேர்தல் ஆணையம் மும்முரம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தானில் உள்ளிட்ட  5 மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் ஒன்றாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு தயாராவதற்கான பணிகள் வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் நிறைவடையும் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சட்டீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.  தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்டோபரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கடந்த சனிக்கிழமை ஆணையம் அறிவித்திருந்தது.

Advertising
Advertising

தெலங்கானா சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் வகையில் தெலங்கானா சட்டப்பேரவையை முதல்வர் சந்திரசேகர ராவ் கலைத்தார்.  சட்டப்பேரவை கலைக்கப்பட்டதை அடுத்து ஏற்கனவே நடந்து கொண்டிருந்த திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதன்படி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 8ம் தேதி வெளியிடப்படும்.  பெயர் சேர்த்தல், நீக்குதல் மனுக்களை வருகிற 25ம் தேதி வரை அளிக்கலாம். அக்டோபர் 4ம் தேதிக்குள் இவை பரிசீலிக்கப்படும். இறுதிப் பட்டியல் 8ம் தேதி வெளியிடப்படும். இதன் பின்னர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் நடத்தப்படலாம். இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு தயாராகி விடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: