ஆசிரியை வீட்டில் 135 சவரன் அபேஸ்

சென்னை: ஆசிரியை வீட்டில் 135 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (60), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி எலிசபெத் (52). அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று, காலை 10 மணிக்கு ஜான் பீட்டர் தொழில் விஷயமாக வெளியூர் சென்றார். எலிசபெத் அருகில் பள்ளிக்கு வேலைக்கு சென்றார். மதியம் ஒரு மணிக்கு பள்ளியில் இருந்து மத்திய உணவு சாப்பிட வீட்டுக்கு எலிசபெத் வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 135 சவரன் நகைகள், 4.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது.

Advertising
Advertising

தகவலறிந்து, மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் திருவள்ளூர் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், 418 சவரன் நகை கொள்ளைபோன நிலையில், நேற்று பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து 135 சவரன், 4.5 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: