நிலுவையில் வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்? மாநகராட்சிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: மாநகராட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை? பதில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணன் என்பவர் தனக்கு சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை மாநகராட்சி பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சென்னை மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்யவில்லை. வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் லலிதா நேரில் ஆஜராகியிருந்தார்.

 வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: சென்னை மாநகராட்சி தொடர்பாக தொடரப்படும் வழக்குகளுக்கு தனி சட்டப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வக்கீல்கள், உதவியாளர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழக்குகளில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்வதை கண்காணிக்க ஏதாவது நடைமுறைகள் உள்ளனவா? அப்படியானால் பதில் மனு தாக்கல் குறித்து எந்த மாதிரி நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? பதில் மனு தாக்கல் செய்யாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து வரும் 19ம் தேதி அன்று மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: