பருவ மழையை முன்னிட்டு 38 கோடியில் தூர்வாரும் பணி மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் 1,894 கி.மீ. நீளமுள்ள 7,350 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு வருடமும் பருவமழை துவங்குவதற்கு முன்பாக இந்த மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்படுகிறது.  மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி சுழற்சி முறையில் ஆண்டிற்கு இரண்டு முறை செயலாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளுக்காக மண்டல வாரியாக 209 பணிகளுக்கு 20.40 கோடி மதிப்பீட்டிலும், மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் உட்செல்ல உள்ள வழிகள் மற்றும் குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றவும், கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை அகற்றுவதற்கும் மண்டல வாரியாக 174 பணிகளுக்கு 17.83 கோடி மதிப்பீட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த மண்டலங்கள் மூலமாக பணிகள் நடந்து வருகிறது.

Advertising
Advertising

இந்தப் பணிகள் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். சென்னையில் உள்ள  நீர்வழிக்கால்வாய்களில் கொடுங்கையூர், ஏகாங்கிபுரம், மாம்பலம் மற்றும் எம்.ஜி.ஆர். கால்வாய்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட  ரொபோடிக் எக்ஸவேட்டர் இயந்திரத்தின் மூலமும் பக்கிங்காம் கால்வாய், அடையாறு, விருகம்பாக்கம் மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய்களில் உள்ள ஆகாயதாமரை பின்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட  ஆம்பிபியன் இயந்திரம் மூலமும் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து நீர்வழி கால்வாய்களில் மிதக்கும் குப்பைகள் முகத்துவாரத்திற்கு செல்லாமல் தடுக்கும் வகையில் மிதக்கும் இயந்திர வலைகள் அமைக்கப்பட்டு கால்வாய்களில் குப்பைகள் அகற்றப்படுகிறது.

இந்த பணிகளை பருவமழை தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும்.  பணிகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: