ஏழை மருத்துவ மாணவிக்கு நடிகர் கமல் நிதியுதவி

சென்னை: பெரம்பலூரைச் சேர்ந்த ஏழை மருத்துவ மாணவி கனிமொழியின் கல்விச்செலவுகள் அனைத்தும் சந்திரஹாசன் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் என்று மக்கள் நீதிமய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவி கனிமொழி. இவர் தனது கல்விக்கட்டணத்திற்காக கூலிவேலை பார்ப்பதாக மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியவந்தது.

Advertising
Advertising

அதன்படி மாணவி கனிமொழியின் கல்விச்செலவு முழுவதையும் சந்திரஹாசன் அறக்கட்டளை மூலமாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருப்பகாவும், வருகின்ற பிப்ரவரி மாதம் தனது மருத்துவ படிப்பினை முடிக்கவுள்ள நிலையில் அவரது கல்விச்செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அவரதுதிறன் மேம்பாட்டு மேற்கல்விக்கான அனைத்து உதவிகளையும் அறக்கட்டளையே ஏற்கும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: