பகலில் துணியை தைக்கும் தொழிலாளி இரவில் கழுத்தை அறுக்கும் கொலையாளி : 8 ஆண்டுகளில் 33 கொலைகள்

போபால்: பகலில் துணி தைக்கும் அப்பாவி டைலராகவும், இரவில் லாரி ஓட்டுனர்களை கொல்லும் கொலையாளியாக வலம் வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம், போபாலின் மன்டிதீப் தொழிற்பேட்டை பகுதியில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி 50 டன் இரும்பு கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரி மாயமானது. இதுகுறித்து தனியார் நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் லாரியின் ஓட்டுனர் மக்கான் சிங், பில்கிரியா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இரும்பு கம்பிகள் இல்லாத நிலையில் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் இருந்த இரும்பை விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர். கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது ஜெய்கரனை பிரஜபதி என்கிற கம்ரா என கண்டறியப்பட்டது.  இதனையடுத்து மன்டிதீப்  பகுதியில் ஜெய்கரன போலீசார் கைது கடந்த வாரம் ைகது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய்கரினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

ஜெய்கரன் போபாலில் ஒரு சிறு தையல் கடையை நடத்தி வந்துள்ளார். பகல் முழுவதும் துணியை வெட்டி தைக்கும் அவர்,  இரவு நேரங்களில் கொலையாளியாக மாறி மனிதர்களை கொன்று குவித்துள்ளான். 8 ஆண்டுகளில் அவன் 33 கொலைகளை செய்துள்ளதாக கிடைத்த தகவல் காவல்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளதுமற்றொரு முக்கியமான விஷயம்,  ஜெய்கரன் கொலை செய்தவர்கள் அனைவரும் லாரி ஓட்டுனர்கள்தான். சாலையோர கடைகளுக்கு உணவருந்த வரும் லாரி ஓட்டுனர்களுடன் நட்பாக பேசி பின்னர் அவர்கள் சாப்பிடும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து உண்ண செய்துள்ளான். அவர்கள் லாரிக்கு சென்று நன்கு தூங்கியபின்னர் அவர்களோடு சேர்த்து லாரியை கடத்தி சென்றுவிடுவான். பின்னர் கிளீனரை கொன்று சடலத்தை எங்காவது புதைத்துவிட்டு லாரியில் இருக்கும் பொருட்களை விற்று பங்கை பிரித்துக் கொண்டுள்ளான்.

ஆரம்பக் காலத்தில் பணத்திற்காக தான் இந்த கூட்டத்தில் ஜெய்கரன் இணைந்தான் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ₹50 ஆயிரம் பெற்று வந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெய்கரனின் மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக கடன் பெற்றதாக தெரிகிறது. எனவே தனது கடனை அடைப்பதற்காக மேலும் அதிக கொலைகளை ஜெய்கரன் செய்துள்ளான் என்று தெரியவந்துள்ளது.

விரல் நுனியில் விவரங்கள்:

கைது செய்யப்பட்ட ஜெய்கரன், தான் கொலை செய்தவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளான். கொலையானவர் கடைசியாக சாப்பிட்ட சாப்பாடு, எங்கே சாப்பிட்டார், என்ன துணியை அணிந்திருந்தார், எங்கே எப்படி கொலை செய்யப்பட்டார் என அனைத்து தகவல்களையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளாள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: