இளைஞர்கள் தற்கொலையை தடுக்க கல்வியில் கொள்கை மாற்றம் தேவை: சத்குரு பேட்டி

சென்னை: இளைஞர்கள் தற்ெகாலையை தடுக்க கல்வி முறையில் கொள்கை அளவில் மாற்றம் தேவை என்று சத்குரு கூறினார். இளைஞரும் உண்மையும் என்ற நிகழ்ச்சி தொடர்பாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். அவர்களின் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற நாடு தழுவிய முன்னெடுப்பை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் என 18 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னையில் கடந்த 10ம்தேதி நடைபெற்றது.

Advertising
Advertising

மொபைல் போன் ஒரு நவீன கண்டுபிடிப்பு அதை இளைஞர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் பயன்படுத்துவதால் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

இளைஞர்கள் தற்போதைய கல்வி முறையில் உள்ள அழுத்தங்களால் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லப்படுகிறது. கல்வி முறையில் கொள்கை அளவில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு மத்திய அரசுடன் பேசி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீதம் நேரம் மட்டுமே கல்வி கற்க ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை விளையாட்டு, இசை, பாரம்பரிய கலைகள் போன்றவற்றுக்காக ஒதுக்க வேண்டும் என பரிந்துரைக்க உள்ளோம்.

 இளைஞர்கள் படித்து பட்டம் வாங்கிய பின்பு பிறரிடம் வேலை கேட்டு செல்வதை சற்று குறைக்க வேண்டும். அவர்களே நேரடியாக மக்களுக்கு பயன்படும் வகையில் தொழில் தொடங்க வேண்டும். புதிய கல்வி கொள்கை உருவாக்கும் போது விவசாய கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டும் விவசாயம் செய்து விட முடியாது. சிறு வயதில் இருந்தே வயலில் இறங்கி பார்த்தால் தான் விவசாயத்தை கற்று கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: