அசாம் உட்பட 4 மாநிலங்களில் நில அதிர்வு

கொல்கத்தா:  அசாமின் பல்வேறு பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. கோக்ராஜ்ஹாரை மையமாக வைத்து பூமியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. காலை 10.20 மணிக்கு அசாமில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 15 முதல் 20 விநாடிகள் நீடித்ததாக கூறப்படுகின்றது.இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் அச்சமடைந்தனர். ஏராளமானோர் அலறியடித்து வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் மேகாலயா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக காஷ்மீரிலும் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6 புள்ளிகளாக பதிவானது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: