திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, தேர்தல் பணிக்குழு செயலாளர் வேளச்சேரி மணிமாறன், திட்டக்குழு உறுப்பினர் பாலவாக்கம் சோமு, பொதுக்குழு உறுப்பினர் க.தனசேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘பெருங்குடியில் அதிமுக அரசை கண்டித்து வரும் 18ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவேண்டும். இது அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டமாக இருக்கவேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: