நாளை மறுதினம் தூய்மை பணியில் ஈடுபட மக்களுக்கு பிரதமர் அழைப்பு

புதுடெல்லி:  ‘‘தூய்மை இயக்கத்தின் அங்கமாக ஒவ்வொருவரும்  மாறவேண்டும்’’ என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:வரும் அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. தூய்மை இந்தியா  என்கிற காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் இயக்கமான  தூய்மை இந்தியா  இயக்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு நாளாகவும் அது அமைந்திருக்கிறது. தூய்மை இந்தியாவுக்காக பாடுபட்ட அனைவரையும் நான் வணங்குகிறேன்.‘தூய்மைக்கான சேவை இயக்கம்’  வரும் 15ம்  தேதி தொடங்குகிறது. இது காந்தி அவர்களுக்கு  நாம் செலுத்தும்  மகத்தான அஞ்சலியாகும்.

தூய்மை இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தவும், இந்த இயக்கத்தின் ஒரு அங்கமாகும் இருக்க அனைவரும் முன்வர வேண்டும். ‘தூய்மைக்கான  சேவை இயக்கத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நாளை மறுநாள் 15ம்  தேதி காலை 9.30 மணிக்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். தூய்மைக்கான  செயல்பாடுகள் தொடங்கியபின், தூய்மை இந்தியா இயக்கம் வலுப்பட மிகுந்த ஈடுபாட்டுடன் களப்பணியாற்றியவர்களுடன், கலந்துரையாடும் தருணத்தை நான் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: