போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு: காஷ்மீரின் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு லாரி வந்தது. அதை சோதனை செய்வதற்காக போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். எனினும், லாரியை போலீசார் மடக்கி பிடித்த நிலையில் அதில் இருந்த 3 தீவிரவாதிகள் தப்பி சென்றனர். இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்கள். லாரியில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.மேலும், தப்பியோடி தீவிரவாதியை தேடி, அப்பகுதியில் போலீசாரும், ராணுவ வீரர்களும் சோதனையிட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: