குடிபோதையில் காரில் தூங்கிய டிரைவர் நாக்குவறண்டு சாவு

தாம்பரம்: குடிபோதையில் காரில் தூங்கிய டிரைவர் நாக்குவறண்டு பரிதாபமாக இறந்தார். தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மதியம் கார் ஒன்று சந்தேகிக்கும்படி நின்றுகொண்டிருப்பதாக சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த காரை திறந்து சோதனை செய்தபோது காரின் முன்பக்க இருக்கையில் ஒருவர் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Advertising
Advertising

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், இறந்த நபர் சேலையூர் அடுத்த மப்பேடு கஸ்பாபுரம் பகுதியை சேர்ந்த தேவதாஸ் ஜான் (35) என்றும், கடந்த 6 ஆண்டகளாக சொந்தமாக கார் வைத்து ஊபர் நிறுவனத்தில் இணைத்து கார் ஓட்டிவந்ததாகவும், தேவராஜ் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் சவாரி முடித்துவிட்டு செம்பாக்கம் பகுதியில் சாலை ஓரம் காரை நிறுத்தி மது அருந்தி காரிலேயே உறங்கியதால் நாக்கு வறண்டு உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: