கேரளாவில் பள்ளி தேர்வுகளில் மாற்றம் காலாண்டுக்கு பதிலாக நேரடியாக அரையாண்டு தேர்வு நடத்த முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ள பாதிப்பால் பள்ளிகளில் பாடங்கள் எடுத்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் காலாண்டு தேர்வுக்கு பதிலாக நேரடியாக டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில்   கோர தாண்டவமாடிய மழையால் பள்ளி, கல்லூரிகள் பல நாட்கள் மூடப்பட்டன. இதனிடையே இந்த வருடம்   பள்ளி காலாண்டு தேர்வுகள் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கப்படும் என   அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை வெள்ளம் காரணமாக காலாண்டு தேர்வு தள்ளி   வைக்கப்பட்டது.  இந்தநிலையில் காலாண்டு தேர்வையும், அரையாண்டு பாட திட்டங்களை சேர்த்து டிசம்பர்   மாதத்தில் ஒரேயடியாக அரையாண்டு தேர்வாக நடத்த தீர்மானித்து உள்ளதாக கேரள கல்விதுறை அமைச்சர்   ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

 
Advertising
Advertising

இதேபோல் வருடம்தோறும் நடத்தப்படும் கேரளா பள்ளி கலை   விழா   இவ்வருடம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு   பல்ேவறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.  இதையடுத்துவிழாவை எளிமையான முறையில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர்   ரவீந்திரநாத் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: