விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : விமானப்படை முன்னாள் தளபதி தியாகிக்கு ஜாமீன்

புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லாண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விவிஐபிக்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக டெண்டர் விடப்பட்டு கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாகவும், அப்போதைய விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி மற்றும் அவரது உறவினர்களுக்கு லஞ்சம் கைமாறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ₹3600 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தியாகி, அவரது உறவினர்கள், கேதான், அவரது மனைவி ரிது, ராஜீவ் சக்சேனா, அவரது மனைவி ஷிவானி மற்றும் அவர்களது நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சம்மன் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தியாகி மற்றும் அவரது உறவினர்கள் ஜாமீனில் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு  நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஜாமீனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: