வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு : புறநகரில் மின்தடை ஏற்படும் அபாயம்

சென்னை: அத்திப்பட்டு வட சென்னை அனல் மின்நிலையத்தில் மூன்று அலகுகளில் ஏற்பட்ட பழுது காரணமாக 1410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்உற்பத்தியும் இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று காலை முதல்நிலையின் மூன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளிலும் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 1200 என மொத்தம் மூன்று அலகுகளிலும் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 1410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: