சினிமாவில் வருவதுபோல 100க்கு போன் செய்து தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்த சிறுமி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், தேவரடியார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவரும் மும்பையில் வளையல் கம்பெனியில் வேலை செய்பவருமான அய்யப்பனுக்கும்(27) நேற்று காலை மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு மணமகன் அழைப்பும், விருந்தும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இதைதொடர்ந்து, நேற்று காலை திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது. மணமேடையில் மணமகன் மாங்கல்யத்தை பெற்று, மணமகளின் கழுத்தில் கட்ட முற்பட்டார். திடீரென மணமேடையை விட்டு எழுந்த மணமகள், நான் மைனர். எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, என்னை பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யச் சொல்கிறார்கள். உடனே திருமணத்தை நிறுத்துங்கள். மீறி தாலி கட்டினால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.

மேலும் தனது செல்போனில் எண் 100க்கு போன் செய்து, போலீசாரிடம், கட்டாய திருமணம் குறித்து புகார் தெரிவித்தார். உடனடியாக தாசில்தார் சுப்பிரமணியன், ஆர்ஐ ரமேஷ், தானிப்பாடி போலீசார் அங்கு விரைந்து வந்து திருமணத்தை நிறுத்தினர். 18 வயதுக்கு முன் திருமணம் செய்வது சட்டவிரோதம் என எடுத்துக்கூறி சிறுமியை ெபற்றோருடன் அனுப்பி வைத்தனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertising
Advertising

அதிகாரிகள் வந்ததால் மணமக்களுடன் பெற்றோர் ஓட்டம்: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பிளஸ் 2 மாணவி. இவருக்கும் மதனாஞ்சேரியை சேர்ந்த உறவினர் மகன் சுதாகருக்கும் (24) நேற்று காலை மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமகள் அழைப்பு நடந்தது. இந்நிலையில் சிலர் பிளஸ் 2 மாணவிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராமனுக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அதிகாலை மணமகன் வீட்டிற்கு சென்றனர். இதை தெரிந்து கொண்ட மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

ஒரே நாளில் 9 குழந்தைகள் திருமணம் அதிரடி நிறுத்தம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.காவனூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, ராமநாதபுரம் அருகே பாண்டியூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, சிவகங்கை மாவட்டம் திருவாடானை தாலுகா என்.மங்கலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, ராமேஸ்வரம் தங்கச்சிமடம் 16 வயது சிறுமி, நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சிவகங்கை மாவட்டம், நன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கமுதி மூலக்கரைப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி, விருதுநகர் மாவட்டம், கடலாடி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி, ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.தரைக்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஆகிய 9 பேரின் திருமணம் நேற்று அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: