கோவை குண்டு வெடிப்பு வழக்கு கைதியை காவலில் விசாரிக்க போலீஸ் மனு தாக்கல்

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த நூகு என்கிற ரஷித் என்ற மாங்காவு ரஷித் (44) கடந்த 10ம் தேதி சென்னை விமான நிலையத்தில், சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர், நேற்றுமுன்தினம் கோவை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில், குண்டுவெடிப்பு கைதிகளுக்கான தனிப்பிரிவில் ரஷித் அடைக்கப்பட்டுள்ளார்.இவரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி எஸ்.ஐ.டி பிரிவு போலீசார் கோவை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: