தமிழக சிறைகளில் நன்னடத்தை அலுவலர் பணியிடம் குறைப்பு : உள்துறை செயலருக்கு நோட்டீஸ்

மதுரை:   மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் ராஜா. உலக சமத்துவத்திற்கான கூட்டமைப்பின் நிறுவனரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழக சிறைகளில் நன்னடத்தை அலுவலர்களாக 92 பேர் பணியாற்றினர். சிறைவாசிகளின் நலனை கவனிப்பது, அவர்களுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவது, குடும்பத்தினர் நலனை கவனிப்பது, பரோல் உள்ளிட்ட அவசர விடுமுறைகளை பரிந்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனித்து வந்தனர். இதனிடையே, கடந்த 2011 உள்துறை அமைச்சகஅரசாணைப்படி, 32 நன்னடத்தை அலுவலர் பணியிடம் ஒப்படைக்கப்பட்டு, 60 ஆக குறைந்தது. இதிலும் 28 பணியிடம் காலியாக உள்ளது. 32 நன்னடத்தை அலுவலர் பணியிடத்திற்கு பதிலாக உளவுப்பிரிவினர், உளவியல் பிரிவினர் என பலரை புதிதாக நியமிக்க உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை சிறைத்துறையை, காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் ெகாண்டு வருவதை போன்று உள்ளது.

Advertising
Advertising

எனவே, நீதிமன்றம் தலையிட்டு 32 பணியிடங்களை அரசிடம் ஒப்படைத்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தேவையான நன்னடத்தை அலுவலர் பணியிடங்களை நிரப்பவும், தேவைப்பட்டால் உளவுப்பிரிவு, உளவியல் பிரிவினருக்கு என தனியாக பணியிடம் ஏற்படுத்தி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுைவ நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், மனு குறித்து உள்துறை (சிறை) செயலர், சிறைத்துறை ஏடிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: