மணப்பெண் மாயமானதால் வேறு பெண் தேடிய அதிமுக எம்எல்ஏ திருமணம் நிறுத்தம் : ஒருவர் கூட பெண் தராததால் விரக்தி

கோபி: மணப்பெண் மாயமானதால் வேறு பெண் தேடிய அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நேற்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. வேறு பெண் தேடியபோதும் ஒருவர் கூட பெண் தர மறுத்ததால் விரக்தியடைந்த அவர், தனக்கு தை மாதம் வரையில் திருமண ஏற்பாடு செய்ய வேண்டாம் என கூறியதாக கட்சியினர் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன் (42). இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார்நகரை சேர்ந்த ரத்தினசாமி-தங்கமணி மகள் சந்தியா(23) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்சிஏ பட்டதாரி. இவர்கள் திருமணம் நேற்று காலை பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெற இருந்தது. ஆனால், திடீரென கடந்த 1ம் தேதி மணப்பெண் சந்தியா மாயமானார். அவர் திருமணம் பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. தோழியின் வீட்டில் இருந்த சந்தியாவை போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு சந்தியாவை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த கூடாது என்ற நிபந்தனையுடன் பெற்றோருடன் அவரை நீதிபதி அனுப்பி வைத்தார்.

இதைதொடர்ந்து, நிச்சயிக்கப்பட்ட அதே தேதியில், வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு எம்எல்ஏ தரப்பில் ஏற்பாடு நடந்தது. அதே பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் நேற்று காலை திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், வேறுயாரும் பெண் தர மறுத்துவிட்டதால், பண்ணாரி கோயிலில் திருமணத்திற்காக அமைக்கப்பட்ட பந்தல் பணி கடந்த 3 நாளுக்கு முன்பே பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று திருமணமும் நடக்கவில்லை. முதலில் பார்த்த பெண் எம்எல்ஏ ஈஸ்வரனின் வயதை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்ததால், ஈஸ்வரன் விரக்தியில் இருப்பதாகவும், தை மாதம் வரை திருமணம்  வேண்டாம் என அவர் முடிவில் உள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.
Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: