தூத்துக்குடி கிறிஸ்தவ சபை பெண் ஊழியர் மர்ம சாவு

தூத்துக்குடி:  சென்னை,  ஆவடியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் நித்யா (23),  இவர் தூத்துக்குடி மில்லர்புரத்தில்  இயங்கும் கிறிஸ்தவ சபை ஒன்றில் தங்கி ஊழியம் செய்து  வந்தார். கடந்த  இரு ஆண்டுகளாக அச்சபையில் இருந்த அவர், கடந்த சில  மாதங்களாக  ரத்தசோகை பாதிப்புக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நித்யா நேற்று திடீரென இறந்தார். ஏற்கனவே அதே சபையில் நிர்வாக பொறுப்பில் இருந்த பெந்தகொஸ்தே போதகர் கனகராஜ், 2016 பிப். 1ம் தேதி கொலை செய்யப்பட்டார். அதே சபையில் இருந்து வந்த பெண் ஊழியரும் தற்போது இறந்துள்ளார்.  இதனிடையே நித்யா  மர்மமான முறையில் மரணமடைந்தாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக நித்யா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழே  விழுந்து விட்டதாகவும் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும்  தகவல்கள் வெளியாகின.  தகவலறிந்து விரைந்து சென்ற  சிப்காட் போலீசார், நித்யாவின் தாய் மற்றும் சபை நிர்வாகிகளிடம் விசாரணை  நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: