திருட்டு பட்டம் கட்டியதால் கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா, அரிசிபாளையத்தை சேர்ந்த கயிறு வியாபாரி தங்கவேல்(43) மகள் வசந்தி(12). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் ரீனா(35) என்பவர் பேக்கில் வைத்திருந்த 600 ரூபாய் திருட்டு போனதாக கூறப்படுகிறது. ஆசிரியை, மாணவி வசந்தியிடம் நீ தான் பணத்தை திருடினாய். என கேட்டதுடன், அக்கம்,பக்கத்தில் உள்ள கடைகளுக்கு  அழைத்துச்சென்று, இவள், பணம் கொடுத்து பொருள் ஏதும் வாங்கினாளா? என கேட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த வசந்தியிடம், பணத்தை என்ன செய்தாய்? என மீண்டும் கேட்டு ஆசிரியை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, 11.30 மணியளவில் வகுப்பறையில் இருந்து வெளியே ஓடி, பள்ளி அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தார். இதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடத்து கொங்கணாபுரம் போலீசார், ரீனா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: