தனியார் நிதி நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி வழக்கு - சிபிஐக்கு மாற்றம்

மதுரை: மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் எங்களிடம் முதலீடு வசூலித்தனர். பல ஆயிரம் பேர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வுத் தொகை வழங்காமல் மோசடி செய்து தலைமறைவாகினர்.

இது குறித்து மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்,’’ என்று கூறியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: