லஞ்ச வழக்கில் கைதான ஆர்டிஓ அலுவலக புரோக்கருக்கு சேலத்தில் ரூ.3 கோடியில் சொத்து

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது மோட்டார் வாகன ஆய்வாளருடன் கைதான புரோக்கர் செந்தில்குமாருக்கு, சேலத்தில் புதிய வீடு மற்றும் வணிக வளாகங்கள் என ரூ.3 கோடியில் சொத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாபு. இவர், முத்துக்குமார் என்பவரது டூரிஸ்ட் வேனுக்கு தகுதி சான்று வழங்குவதற்கு ₹25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாபுவுக்கு சொந்தமாக கடலூரில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ₹35 லட்சம் ரொக்கம், 200 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அவரது பெயரிலும், அவரது மனைவி மங்கையர்க்கரசி பெயரிலும் வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பாபுவுக்கு புரோக்கராக செயல்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த புரோக்கர் செந்தில்குமார்(44) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர், பாபுவின் பினாமியாக செயல்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், செந்தில்குமாருக்கு சேலத்தில் உள்ள வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் 100 பவுன் நகைகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளுக்கான பாஸ் புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செந்தில்குமார், சமீபத்தில் ₹3 கோடி மதிப்பில் ஆத்தூர் எல்ஆர்சி நகரில் வணிக வளாகம் மற்றும் புதிதாக வீடு கட்டியுள்ளார். தற்ேபாது இந்த வீட்டில் தான் சோதனை நடந்துள்ளது. இந்த வீடு மற்றும் வணிக வளாகத்திற்கு கிரகப்பிரவேசம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், செந்தில்குமார் சிக்கிக்கொண்டார்.

ஜோதிடம் பார்த்தவர் கோடீஸ்வரன் ஆனார்

ஜோதிடம் படித்துள்ள செந்தில்குமார், பாபுவிற்கு ஜோதிடம் பார்த்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனால், பாபுவுக்கு நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். இதையடுத்து, பாபு பணியாற்றும் இடங்களில் எல்லாம், செந்தில்குமார் உடன் சென்று பணப்பரிவர்த்தனைகளை நடத்தி வந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: