யார் ஊழல்வாதி என்று ஊருக்கே தெரியும் : டிடிவி மீது அமைச்சர் தங்கமணி பாய்ச்சல்

சென்னை: மின்வெட்டு அமைச்சர் தங்கமணி என்று டிடிவி.தினகரன் தெரிவித்த கருத்துக்கு, யார் ஊழல் செய்து சிறைக்கு சென்றது என்று ஊருக்கே தெரியும் என அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார்.தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில் மின்சாரத்துறையில் நடந்து வரும் ஊழல் காரணமாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின்சாரத்துறையில் ஊழல் என பல்வேறு புகார்கள் கூறுகின்றனர். மின்சாரத்துறையில் ஊழல் எதுவும் நடக்கவில்லை, ஆனால் 2 நாட்கள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மின்வெட்டு இருந்தது உண்மைதான். எதற்காக என்றால் மின் உலைகளில் பரமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

Advertising
Advertising

இதனால் சில இடங்களில் மட்டும் சில மணிநேரங்கள் மின்வெட்டு இருந்தது. மேலும், தமிழகத்தில் காற்றாலைகளில் மின்சாரம் எடுக்கப்படுவதால், மத்திய அரசு கொடுத்து வந்த மின்சாரத்தில் 3 ஆயிரம் மெகாவாட் குறைக்கப்பட்டுள்ளது.அணு உலைகள் பாராமரிப்பில் இருந்த போது, காற்றாலைகளிலும் சரியாக மின்சாரம் கிடைக்கவில்லை. இதன்காரணமாக தான் மின்வெட்டு இருந்தது. தற்போது அனைத்தும் சரியாகி உள்ளது. இதேபோல் மின்சாரத்துறையில் பணி இடம் மாறுதலுக்கு பணம் வாங்குவதாகவும், டெண்டருக்கு பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மின்சாரத்துறையில் அப்படி எந்த ஊழலும் நடப்பதில்லை, அப்படி ஊழல் என்று நிரூபித்தால் அதற்கு நான் பொறுப்பு. முறையாக 3 ஆண்டுக்கு ஒரு முறை பணி மாற்றம் செய்யப்படுகின்றனர்.டிடிவி.தினகரன் என்னை மின்வெட்டு அமைச்சர் என்றும், ஊழல் செய்கிறேன் என்றும் விமர்சித்துள்ளார். யார் ஊழல் செய்து சிறைக்கு சென்றது, இன்னும் யார் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஊருக்கே தெரியும். அவர் ஊழலால் திகார் ஜெயிலுக்கு சென்றவர். அவர் எல்லாம் என் மீது குறை சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: