23 கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைக்கு அனுமதி : தடையை மீறினால் கடும் நடவடிக்கை...போலீசார் எச்சரிக்கை

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 23 கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை அமைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். தடையை மீறி யாரேனும் சிலை அமைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து விநாயகர் சிலைகள் இன்று முதல் சாலைகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 23 கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

விநாயகர் சிலை அமைப்போருக்கு போலீசார் விதித்த கட்டுப்பாடுகளில் சில அம்சங்கள்:
Advertising
Advertising

 சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அனுமதியுடன் மட்டுமே விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகள் நிறுவப்பட வேண்டும்.

 நகராட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியத்திடமிருந்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.

 இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரையில் ஒலி பெருக்கியை பயன்படுத்துவதோ, பெரும் சத்தத்தை ஏற்படுத்தும் வெடிகளை வெடிப்பதோ, அறவே தடை செய்யப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மட்டுமே ஒலி பெருக்கியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

 தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதுடன் பந்தல்களில் அமைக்கப்படும் மின் உபகரணங்கள் சம்பந்தப்பட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

 சிலை வைக்கப்பட்டுள்ள வழிபாட்டு இடத்தின் உள்ளோ அல்லது அருகிலோ எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்கக் கூடாது.

 விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மின்சார வசதி தேவைப்பட்டால் முறையாக தற்காலிக மின் இணைப்பு மின்சார வாரியத்திடமிருந்து பெறுதல் வேண்டும்.

 விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் காவல்துறையினரின் நிபந்தனை

களுக்கு உட்பட்டு குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் பாதைகளின் வழியாக மட்டுமே நடத்தப்பட்டு சிலைகள் கரைப்பிற்கென அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும்.

 தனியார் இடங்களில் சிலைகள் வைப்பதற்கு இடத்தின் உரிமையாளரிடமிருந்து எழுத்து மூலமாக ஒப்புதல் கடிதமும், பொது இடத்தில் வைக்கப்படும் சிலைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்து ஒப்புதல் கடிதமும் பெற்று அனுமதி கடிதத்துடன் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 சுற்றுச்சூழலை பாதிக்கும் “பிளாஸ்டர் ஆப் பாரீஸ்” மற்றும் ரசாயன கலவை, வர்ணம் கொண்டு செய்யப்பட்ட சிலைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

 பிற மத வழிபாட்டு தலங்களான கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் அருகே விநாயகர் சிலைகள் கண்டிப்பாக வைக்கப்படக் கூடாது.

  போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது அதிகமாக மக்கள் நடமாடும் மார்க்கெட் போன்ற இடங்களிலோ, மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியவைகளின் அருகிலோ, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களிலோ விநாயகர் சிலைகளை கண்டிப்பாக வைக்கக் கூடாது.

 காவல் துறையினரால் வழங்கப்படும் ஒலிபெருக்கி உரிம நிபந்தனைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

 விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பிற மத உணர்வுகளை புண்படுத்துகின்ற வகையில் பாடல்கள் பாடப்படுவதோ, கோஷங்கள் எழுப்பப்படுவதோ கூடாது.

 விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒலி மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கக் கூடாது.

 சிலை நிறுவுபவர்கள் தங்கள் சார்பாக சுழற்சி முறையில் எப்பொழுதும் ஐந்து (05) பாதுகாவலர்களை நியமிக்கவேண்டும். பொது அமைதியையும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை அமைப்பாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2520 விநாயகர் சிலை 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு:

சென்னை முழுவதும் 2520 சிலைகள் நிறுவி வழிபாடு நடத்த பல்வேறு அமைப்பு சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில்  6 இணை ஆணையாளர்கள்,  12 துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடுகள் முடிந்த பிறகு வருகின்ற 13ம் தேதி  முதல் 17ம் தேதி வரை உள்ள ஐந்து தினங்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று கடலில் கரைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: