யாருடன் தேர்தல் கூட்டணி : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் வருகிற 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கிறது. இதையொட்டி, கால்கோள் நாட்டு விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கால்கோள் நாட்டினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சரோஜா, ஜெயக்குமார், துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்பி, மாவட்ட கலெக்டர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்,  நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மட்டும் அல்ல, இனி வரும் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என அனைத்திலும் அதிமுகவே வெற்றி பெறும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். கடைசி நேரத்தில் டோக்கன் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டனர்.

Advertising
Advertising

தேர்தல்  கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்யப்படும். அதற்கு இது சரியான தருணமல்ல. தேர்தல் அறிவித்த பின்னர் தான் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் போன்றவை அரசியலில் நடைபெறும். ஆளுநருக்கு   அறிவுரை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது.  8 கோடி தமிழ்மக்களின் உணர்வை எடுத்துரைக்கிறோம், சிறைத்துறையும் பரிந்துரைத்திருக்கிறது. அவர்களின் நற்சான்றிதழ் குறித்த அறிக்கையையும் அனுப்பி இருக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து தகுந்த நேரத்தில் ஆளுநர் நல்ல முடிவை மேற்கொள்வார்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: