பசுமை சாலையில் மாற்றம் என்பது ஏமாற்று வேலை : அன்புமணி வலியுறுத்தல்

சென்னை:  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரித்துள்ள முன் சாத்தியக்கூறு அறிக்கை சுற்றுச்சூழல் அனுமதிக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 8 வழிச் சாலைத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பே, பசுமை வழிச் சாலை மீது மக்களுக்கு உள்ள கோபத்தை குறைப்பதற்கான நடவடிக்கை தான். இப்போது முதற்கட்டமாக 6 வழிச்சாலை அமைத்து விட்டு, அடுத்தக்கட்டமாக அதை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதன் முன்- சாத்தியக்கூறு அறிக்கையிலேயே இதற்கான புள்ளி விவரங்களையும் தெரிவித்துள்ளது. இம்மாற்றத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவு மட்டும் தான் கால்வாசி குறைந்துள்ளதே தவிர, நிலங்களை பறி கொடுக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாது. வால் போன்ற சிறிய பகுதியை மட்டும் விட்டு வைப்பார்கள். அந்த நிலத்தையும் அடுத்த சில ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கையகப்படுத்துவார்கள்.  எனவே பசுமைச்சாலைத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: