குறைவாக மாணவர்கள் படிப்பதாக கூறி தமிழகத்தில் 662 பள்ளிகளை மூடும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் மிகக் குறைவான மாணவர்கள் படிக்கும் 662 பள்ளிகளை மூடிவிட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மூடப்படும் பள்ளிகளை நூலகங்களாக மாற்றவும் பள்ளிக் கல்வித்துறை முயற்சி வருகிறது.தமிழகத்தில் 53 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 80 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கையை பொறுத்தவரையில் மேற்கண்ட அளவில் இருக்கிறதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.  வகுப்பு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் இருக்க வேண்டும் என்ற  அளவில் ஆய்வு நடத்தியதில் 900 பள்ளிகளில் 10க்கும் கீழ் குறைவாகவே மாணவ, மாணவியர் படித்து வந்தது கண்டறியப்பட்டது.

Advertising
Advertising

இதையடுத்து அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார். அதன் பேரில் மேற்கண்ட பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதில் 238 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.  மீதம் உள்ள 662 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை. 10 மாணவர்களுக்கு குறைவாகவே இருந்தது. அதனால் அந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இம்மாத இறுதிவரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடி இம்மாத இறுதிக்குள் அந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

அதனால், அந்த பள்ளிகளில் தற்போது படித்து வரும் சொற்ப மாணவ, மாணவியரை அருகில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதுடன், ஆசிரியர்களையும் அந்த பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக, தற்போது 662 பள்ளிகள் மாணவர்கள் இன்றி காலியாகிவிடும். எனவே அந்த பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 662 பள்ளிகளின் கட்டிடங்களில் நூலகங்களை திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிகளை மூடுவதற்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிகளை மூடக் கூடாது. அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை மாற்றினால் மாணவர்கள் நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை ஏற்படும். மேலும் அருகாமை பள்ளிகள் என்ற அமைப்பு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: