ஐசியு-வில் கிடக்கிறது அதிமுக ஆட்சி : டிடிவி.தினகரன்

சென்னை:  ஒரு நோயாளி, ஐசியுவில் இருக்கும்போது, அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழப்பதுபோல, இந்த ஆட்சியில் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன என அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மதியம் 12.45 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:இந்த அரசு மீது, முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகின்றன. ஒரு நோயாளி, ஐசியுவில் இருக்கும்போது, அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழப்பதுபோல, இந்த ஆட்சியில் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.தற்போது தமிழகத்தில் மின்வெட்டு பெரும் பிரச்னையாக உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, இந்த ஆட்சி அடங்கும் நேரம் வந்துவிட்டது. இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதுதான் உண்மை.  எனவே, வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்பிக்கள்தான், பிரதமர் யார் என முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: