சிக்னல் கோளாறால் மெட்ரோ ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் : 2வது நாளாக பயணிகள் அவதி

சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக நேற்றும் மெட்ரோ ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவே, 3 முைற சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டன. 4வது முறையாக நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் திருமங்கலம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதனால்  சென்ட்ரல் - பரங்கிமலை, சென்ட்ரல்-விமானநிலையம் ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் 35 நிமிடமாக சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த நேற்று காலை 9 மணியளவில் விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் புறப்பட்ட போது, திடீர் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு, வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு, மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: