அடுத்தடுத்து வந்த விமானங்களில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: ஒரே நாளில் அடுத்தடுத்து வந்த விமானங்களில் நூதன முறையில் ₹21 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பார்ட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.சென்னையை சேர்ந்த ஈஸ்வரன் (52), சுற்றுலா பயணியாக  மலேசியா சென்று திரும்பினார். அவரது சூட்கேசை சோதனையிட்டபோது, அதில் ஒரு பர்ஸ் போன்ற பவுச் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, 350 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹10.5 லட்சம். அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
Advertising
Advertising

இதைதொடர்ந்து, அபுதாபியில் இருந்து எத்தியார்டு விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு (31) என்பவர், சுற்றுலா பயணியாக சென்று திரும்பினார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை.பின்னர், அவரை தனியறையில் வைத்து சோதனையிட்டபோது, உள்ளாடைகளில் ஒரு தங்க செயின், தங்க துண்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹ 6 லட்சம். தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

இதையடுத்து, அதிகாலை 3.30 மணிக்கு கொழும்புவில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த உசேன் (42) என்பவரின் உடமைகளை சோதனையிட்டனர். அவர் அணிந்திருந்த கோட்டின் அலங்கார பட்டன்களில் வித்தியாசம் தெரிந்தது. அதனை கழற்றி சோதனை செய்தபோது, பட்டன்களுக்கு பதிலாக தங்கத்தை வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 150 கிராம் தங்க பட்டனை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹4.5 லட்சம். அவரையும் கைது செய்தனர்.ஒரே நாளில் அடுத்தடுத்து வந்த விமானங்களில் நூதன முறையில் கோட் பட்டன் போல அமைத்து கடத்தி வந்தது உள்பட 3 பேரிடம் இருந்து ₹21 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது.

அமெரிக்க கரன்சி பறிமுதல்

சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு நேற்று அதிகாலை 2.20 மணிக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த காசிம் (30) என்பவர் சுற்றுலா பயணியாக செல்ல இருந்தார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது, எதுவும் இல்லை. பின்னர், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவரது உள்ளாடைகளில் ₹5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க கரன்சிகளை மறைத்து இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, காசிமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: