அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு

சென்னை: பருவமழை  காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து விரிவான சுற்றறிக்கை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:மழை, பேரிடர் காலங்களில் மக்களுக்கு விரைவாக அவசரகால செய்திகளை கொண்டு சேர்க்க தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் www.tnsdma.tn.gov.in என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மழை, பேரிடர் காலங்களில் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பதிவு செய்யலாம். இதன் மூலம் பேரிடர் காலங்களில் அந்த தகவல்களை பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

Advertising
Advertising

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் முடிய உள்ள காலங்களில் கடலோர மாவட்டங்களும் மற்றும் உள்மாவட்டங்களும் புயல் மற்றும் பெரு வெள்ளங்களினால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  மாவட்ட கலெக்டர்கள் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் பேரிடருக்கு முன்னும், பேரிடரின்போதும் மற்றும் பேரிடருக்கு பின்னரும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண முகாம் அமைக்க நடவடிக்கைகள், நீர்நிலைகளை கண்காணிப்பது,  குறித்து விரிவான செயல் திட்டம் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: