10 சதவீத கமிஷன் தராததால் மறு அறிவிப்பு : நெடுஞ்சாலை டெண்டருக்கு தடை

 நெல்லை கோட்ட பொறியாளர் முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 அவர் 10 சதவீத கமிஷன் கேட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

மதுரை: ரூ.8.69 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு 10 சதவீத கமிஷன் தராததால், மறு அறிவிப்பு வெளியிடப்பட்ட டெண்டருக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மூலக்கரைப்பட்டியை சேர்ந்த எம்.முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நெடுஞ்சாலைத்துறையில் முதல் நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். நெல்லை மாவட்டத்தில் ரூ.44 கோடி மதிப்பில் பல்வேறு சாலைப்பணிகளுக்கான ஒப்பந்தம் குறித்த டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் பல திட்டங்களுக்கு நான் இ-டெண்டரில் விண்ணப்பித்தேன். இதில், ரூ.8.69  கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் நான் தகுதியானவராக தேர்வு செய்யப்பட்டேன்.

இதனிைடயே, நெல்லை கோட்ட பொறியாளர் முருகன், ஆகஸ்ட் 9ல் என் அலுவலகத்திற்கு வந்தார். 10 சதவீத கமிஷன் தந்தால் உடனடியாக பணி ஒப்பந்த ஆணை வழங்குவதாக கூறினார். நான் 10 சதவீத கமிஷன் தர மறுத்தேன். இதனால் என்னிடம் கோபமடைந்தார். எனக்கு ஒப்பந்த ஆணை வழங்க மறுத்தார். தற்போது புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 ஏற்கனவே நடந்த இ-டெண்டரில் நான் தேர்வான நிலையில், என்னிடம் எந்த விளக்கமும் கோராமல் ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். டெண்டர் ஏற்றுக்கொண்ட பிறகு அதை ரத்து செய்தது தவறு. 10 சதவீத கமிஷன் கேட்டது குறித்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தேன்.

 என்னிடம் கமிஷன் கேட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும், அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு கமிஷன் தராததால் மறுடெண்டர் அறிவிப்பு வெளியிட்ட அதிகாரி மீது தன்னிச்சையாக  விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், சாலை பணிகளுக்கான ெடண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், எனக்கே ெடண்டரை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், டெண்டர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவிற்கு நெல்லை நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை பொறியாளர், கோட்ட பொறியாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12க்கு தள்ளி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: