குவைத் விமானத்தில் இயந்திர கோளாறு : 172 பேர் உயிர் தப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத் சென்ற விமானத்தில் ஏற்பட்டிருந்த இன்ஜின் கோளாறை சரியான நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 172 பேர் உயிர் தப்பினர்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் செல்லும் விமானம் நேற்று அதிகாலை 2.50 மணிக்கு புறப்பட்டது. அதில் 166 பயணிகள், 6 சிப்பந்திகள் என 172 பேர் இருந்தனர். வானில் பறப்பதற்கு முன், ஓடுபாதையில் வேகமாக சென்றபோது விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, ஓடுபாதையில் வேகமாக சென்ற விமானத்தை அவசரமாக நிறுத்தி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து 2 இழுவை வண்டிகள் கொண்டு வரப்பட்டு, அந்த விமானத்தை, மீண்டும் புறப்பட்ட பகுதியில் கொண்டு வந்து நிறுத்தினர்.

Advertising
Advertising

பின்னர், அதில் இருந்த 172 பேரும் பத்திரமாக இறக்கப்பட்டு விருந்தினர் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் பொறியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீரமைக்க முடியவில்லை.இதைதொடர்ந்து, விமான பயணிகளை பல்வேறு தனியார் ஓட்டல்களில் தங்க வைத்து, விமான பழுது சீரானதும் புறப்படும் என குவைத் விமான நிர்வாகம் அறிவித்தது.விமான இயந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை உரிய நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 172 பேர் உயிர் தப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: