ஏர்கன் வெடித்து இன்ஜினியர் படுகாயம்

வேளச்சேரி: பொழுது போக்கிற்காக வாங்கி வைத்திருந்த ஏர்கன் வெடித்து இன்ஜினியர் படுகாயமடைந்தார்.  மேடவாக்கம் அருகே பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர் பொழுதுபோக்குக்காக ஒரு ஏர்கன்னை வாங்கி வைத்து, வீட்டுக்குள் குறிபார்த்து சுடுவதற்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேலை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய விக்னேஷ், வீட்டில் ஏர்கன்னை வைத்து குறிபார்த்து சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த ஏர்கன் வெடித்துச் சிதறியது. அதில் இருந்த ரப்பர் குண்டுகள் அவரது கால்களில் பட்டுத் தெறித்தன.  இதில் படுகாயம் அடைந்த விக்னேஷை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷிடம் ஏர்கன் பயன்பாடு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: