ஜெ., மரணம் தொடர்பான விசாரணையை அக்.,24-க்குள் முடிக்க ஆறுமுகசாமி ஆணையம் தீவிரம்

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியாலை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. அவர் லண்டனில் இருப்பதால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரிக்க வசதியாக, சேப்பாக்கத்தில் உள்ள பசுமை தீர்பாயத்தில் சில ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசித்து வருகிறது. துணை முதல்வர் ops-ஐ விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் கொண்டு வர ஆறுமுகசாமி கமிஷன் திட்டமிட்டுள்ளது.

Advertising
Advertising

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை பற்றிய விசாரணையை அக்டோபர் 24-க்குள் முடித்து அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு ஏதுவாக விசாரணை நடைமுறைகளை வரும் அக்டோபர் 18-க்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: